தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை: தடை கோரி வழக்கு

என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை: தடை கோரி வழக்கு

என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை: தடை கோரி வழக்கு


ADDED : மார் 07, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : உயர்கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை வெளியிட தடை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி செல்லமுத்து தாக்கல் செய்த பொதுநல மனு:

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.,) மூலம் இந்தியாவிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

கற்பித்தல், மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அளவுகோல் அடிப்படையில் தரவரிசை அளிக்க வேண்டும். இதை சரியாக பின்பற்றாத கல்லுாரிகளுக்கு தரவரிசையில் முதலிடம் அளிக்கப்படுகிறது.

வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதில்லை. முறைகேடு நடக்கிறது. மாணவர்கள் சரியான கல்லுாரியை தேர்வு செய்ய முடியவில்லை.

2025க்கு என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான ஒப்புதல், மதிப்பெண், வருமானவரித்துறை தணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தபின் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு மத்திய கல்வித்துறை செயலர், தேசிய அங்கீகார வாரிய உறுப்பினர் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச் 20க்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us