/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கீழையூரில் கால்வாயை காணவில்லை: குமுறும் விவசாயிகள்
/
கீழையூரில் கால்வாயை காணவில்லை: குமுறும் விவசாயிகள்
கீழையூரில் கால்வாயை காணவில்லை: குமுறும் விவசாயிகள்
கீழையூரில் கால்வாயை காணவில்லை: குமுறும் விவசாயிகள்
ADDED : ஆக 09, 2024 01:19 AM

மேலுார் : கீழையூர் கால்வாய் முற்றிலும் சிதிலமடைந்துள்ள நிலையில் கால்வாயை பராமரிக்காமல் காலம் கடத்துவதாக நீர்வளத்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
புலிப்பட்டி - குறிச்சிபட்டி வரை உள்ளது பெரியாறு ஒரு போக பாசன பகுதி. அணையில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் இருந்தால் ஆக.15 அல்லது செபடம்பரில் தண்ணீர் திறக்க வேண்டும். பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்ததும் கீழையூர் 8 வது கால்வாயில் செல்லும் தண்ணீர் கீழவளவு வழியாக 5 கி.மீ., தொலைவில் உள்ள இ.மலம்பட்டி வரை செல்லும்.
இதனால் 30 க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி அதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். இதில் பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் செல்லும் கால்வாயை காணாததால் விவசாயிகள் குமுறுகின்றனர்.
விவசாயி தர்மலிங்கம் கூறியதாவது: பஞ்சபாண்டவர் மலை அருகே செல்லும் பெரியாற்று கால்வாய் பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கால்வாயில் தண்ணீர் திறந்தால் அது வீணாக குவாரிக்குள் செல்வதால் கீழவளவு, இ.மலம்பட்டிக்கு செல்வதில்லை. இதனால் ஆயிரத்துக்கும் மேலான நிலங்களில் சாகுபடி செய்ய இயலாமல் விவசாயிகள் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்துள்ளது.
ஆண்டு தோறும் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் திட்டத்தில் ரூ.கோடிகணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தாண்டு 6 மாதங்களுக்கு முன்பே நிதி ஒதுக்கியும் இன்னும் வேலை துவங்கவில்லை. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் விரைவில் தண்ணீர் திறக்க உள்ளனர். இந்நிலையில் அவசரமாக பெயரளவில் மராமத்து செய்வதால் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டதாக கணக்கு எழுத வாய்ப்புள்ளது. நீர்வள அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் கால்வாய்களை மராமத்து பார்க்க வேண்டும்'' என்றார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், கால்வாய்களை பழுது நீக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.