/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றமில்லை தமிழக நிர்வாகிகள் நிம்மதி
/
காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றமில்லை தமிழக நிர்வாகிகள் நிம்மதி
காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றமில்லை தமிழக நிர்வாகிகள் நிம்மதி
காங்., மாவட்ட தலைவர்கள் மாற்றமில்லை தமிழக நிர்வாகிகள் நிம்மதி
ADDED : மார் 07, 2025 05:21 AM
மதுரை : தமிழகத்தில் மாவட்ட தலைவர்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளவில்லை என மேலிட பார்வையாளர் கிரிஷ் சோதன்கர் உறுதியளித்ததால் கட்சிக்குள் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மாநில தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றதும் மாநிலம் முழுவதும் அவரது ஆதரவாளர் நிர்வாகிகளை கட்சிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக மாநில பொருளாளர் முதல் மாவட்ட தலைவர் வரையான பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் மூத்த நிர்வாகிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு மாவட்ட தலைவர்களை மாற்றும் எண்ணம் மாநில தலைமைக்கு ஏற்பட்ட நிலையில் மூத்த தலைவர்கள் ஆசியுடன் 27 மாவட்ட தலைவர்கள் டில்லி சென்று செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவர்களை டில்லி நிர்வாகிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தது.
இந்நிலையில், கடந்த வாரம் சென்னை வந்த தமிழக மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோதன்கர் முக்கிய மாவட்ட தலைவர்களை அழைத்து பேசினார். அப்போது மாவட்ட தலைவர்களை மாற்றும் எண்ணம் இல்லை என உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், முன்பிருந்த மேலிட பார்வையாளர் அஜோய்குமாரிடம் இப்பிரச்னை குறித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அவர் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்நிலையில், கிரிஷ் சோதன்கர் எங்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். எங்கள் தரப்பை விளக்கினோம்.
இதையடுத்து மாவட்ட தலைவர்கள் பதவியில் எந்த மாற்றமும் நடக்காது. சட்டசபை தேர்தல் பணிகளை கவனியுங்கள் என உறுதியளித்ததால் நிம்மதியாக உள்ளது என்றனர்.