/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கீகாரமும் இல்லை; எந்த தகவலும் இல்லை துணைத்தலைவர் புலம்பல்
/
அங்கீகாரமும் இல்லை; எந்த தகவலும் இல்லை துணைத்தலைவர் புலம்பல்
அங்கீகாரமும் இல்லை; எந்த தகவலும் இல்லை துணைத்தலைவர் புலம்பல்
அங்கீகாரமும் இல்லை; எந்த தகவலும் இல்லை துணைத்தலைவர் புலம்பல்
ADDED : மார் 13, 2025 05:18 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில்தலைவர் சகுந்தலா, கமிஷனர் சக்திவேல், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., அய்யப்பனும் பங்கேற்றார்.
மேடையில் துணைத் தலைவர் காங்., கட்சியைச் சேர்ந்த தேன்மொழிக்கு இருக்கை ஒதுக்கி இருந்தனர். அங்கு செல்லாமல்கவுன்சிலர்களுடன் அமர்ந்தவர், தனக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை. நகராட்சி நிர்வாக நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பது இல்லை' என்றார். அவரை சமரசம் செய்து மேடையில் அமர செய்தனர்.
எம்.எல்.ஏ., அய்யப்பன், 'சட்டசபை கூட்டத்தொடரில் உசிலம்பட்டி வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் இருந்தால் கொடுங்கள். அது குறித்து சட்டசபையில் பேசுகிறேன். உசிலம்பட்டிக்கு தேவையான 10 வளர்ச்சித்திட்டங்கள் குறித்து முன்வைத்திருந்தோம். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்புக்கிடங்கு மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்றவை கிடப்பில் உள்ளது' என்றார்.
பின்னர் அடிப்படை குடிநீர் வசதிகள், நகராட்சி நிர்வாக செலவினங்கள், மின்மயான உரிமம் புதுப்பிப்பு, யு.வாடிப்பட்டியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை குப்பைக்கிடங்கு பராமரிப்பு உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றினர்.