/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செயல் அலுவலர் இல்லாத டி. கல்லுப்பட்டி பேரூராட்சி
/
செயல் அலுவலர் இல்லாத டி. கல்லுப்பட்டி பேரூராட்சி
ADDED : செப் 14, 2024 05:13 AM
டி.கல்லுப்பட்டி: டி. கல்லுப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு செயல் அலுவலர் மட்டுமே இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சியில் 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி துாய்மை பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அத்யாவசிய பணிகளுக்கு செலவு செய்வது செயல் அலுவலரின் பணியாகும். குழாய் உடைப்பு, மின்கம்பங்கள் சேதம் உள்ளிட்ட பணிகளுக்கு செயல் அலுவலர் உத்தரவு மூலம் ஒப்பந்தக்காரர்கள் பணிகளை நிறைவு செய்வது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலர் கண்ணன் இடமாற்றப்பட்டார். இதனால் 2 மாதங்களாக பேரையூர் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.