ADDED : ஆக 14, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலத்தில் கவிஞர் செந்தியின் 5வது கவிதைத் தொகுப்பு 'சில்க்கின் கண்களை அணிந்து கொண்ட ஒருத்தி' நுால் வெளியீட்டு விழா நடந்ததது. கம்பன் கழகத் தலைவர் அழகர்நாதன் தலைமை வகித்தார்.
இலக்கிய பேரவை தலைவர் பூலோக சுந்தரவிஜயன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கரன் வரவேற்றார். பேராசிரியர் ராமசாமி பேசினார். தொழிலதிபர் ஜெயராமன் நுாலை வெளியிட தொழிலதிபர் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். முன்னாள் நகராட்சி தலைவர் நிரஞ்சன், இறையன்பு நுாலகம் ஆராய்ச்சியகம் நிறுவனர் பார்த்தசாரதி ஆகியோர் பேசினர்.
நுால் குறித்து கவிஞர் லிபி ஆரண்யா, கவிஞர் ரோஸ்லின், நினைவுகளின் நிலவெளி கதை நுால் குறித்து பேராசிரியர் பெரியசாமி ராஜா, மேகா பதிப்பகம் அருணாசலம் பேசினர். கவிஞர் செந்தி ஏற்புரை வழங்கினார். ராஜேந்திரன் நன்றி கூறினார்.