ADDED : ஆக 15, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைத் தலைவர் காளிமுத்து எழுதிய 'அவள் தந்த பரிசு' நுால் வெளியீட்டு விழா நடந்தது.
செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் வெண்புறா தலைமை வகித்தார். செயலாளர் லெனின், செயற்குழு உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் வெளியிட கவிஞர் எரியீட்டி பெற்று கொண்டார். காளிமுத்து ஏற்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் காமாட்சி, பசுமலைபாரதி பங்கேற்றனர். பொருளாளர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.