ADDED : மார் 22, 2024 04:55 AM
மதுரை: உலக கவிதை தினத்தை முன்னிட்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், சி.எஸ்.ஐ., மகளிர் கலை அறிவியல் கல்லுாரி சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் நுால் அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்து பேசுகையில், ''கவிதைகள் நம் வாழ்வை வளமாக்குகிறது. கட்டுரையை விட கவிதை எழுதுவது கடினமான பணி'' என்றார். தமிழ்ச்செல்வன் 'தமிழ்ச் சிறுகதைகளின் வளமும் வனப்பும்' தலைப்பில் பேசினார்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் நரசிம்மன், மதுரைக் கல்லுாரி உதவி பேராசிரியர் காந்திமதி, கவிஞர் முத்துமாணிக்கம், முன்னாள் கணக்கு அலுவலர் பரமசிவம் எழுதிய நுால்கள் அரங்கேற்றப்பட்டன. மதுரை காமராஜர் பல்கலை விரிவுரையாளர் சரவணன், மீனாட்சி கல்லுாரி விரிவுரையாளர் நிர்மலாதேவி, பட்டிமன்ற பேச்சாளர் சுகுமாரி, ஆன்மிக சொற்பொழிவாளர் வள்ளியம்மை, இளங்கோவன் கார்மேகம் உள்ளிட்டோர் பேசினர். சங்க ஆய்வுவளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

