ADDED : ஜூலை 15, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை காந்தி மியூசியத்தில் நுால் மதிப்பாய்வுரை கூட்டம் நடந்தது.
எஸ்.பி.ஐ., வங்கி ஓய்வு மேலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' என்னும் நுாலை மதிப்பாய்வுரை செய்தார்.
அவர் பேசுகையில், 'தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் காந்தியை சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழர்கள். மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரக போராட்டங்களில் உயிர் தியாகம் செய்தோரில் அதிகம் பேர் தமிழர்கள். 1896 முதல் 1946 வரையான காலத்தில் காந்தி, தமிழகத்திற்கு 20 முறை வந்துள்ளார்' என்றார். ரயில்வே மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார். மியூசிய செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்தார்.

