ADDED : ஜூலை 25, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் வானதி தலைமை வகித்தார். வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம், எதிர்கால தொற்று நோய்களை குறைத்தல், ரத்தத்தில் இரும்பு சத்து அளவை குறையாமல் பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதற்காக 4800 மாணவிகளுக்கு இலவச சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. திட்ட அலுவலர்கள் பூமாதேவி, ஜெயக்குமாரி ஞானதீபம், ரேணுகா, உஷா, புவனேஸ்வரி ஏற்பாடு செய்தனர்.

