ADDED : ஆக 30, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : வலைச்சேரிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் சக்கப்படை கண்மாயினுள் உள்ள நாட்டு சீமை கருவேல மரத்தை வேருடன் அகற்ற ஏலம் நடந்தது. ஊராட்சி தலைவி சக்திபிரியா தலைமை வகித்தார்.
மரங்கள் ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் ஜி.எஸ்.டி., சேர்த்து ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 750 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. துணை பி.டி.ஓ., க்கள் ராஜபூபதி, முத்தையா செயலர் முத்துகுகன் உடனிருந்தனர்.

