நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர்கள், செவிலியர்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் தேவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ., ஜெயந்தி, டி.எஸ்.பி., வேல்முருகன், எஸ்.ஐ., ஆனந்தஜோதி உள்ளிட்டோர் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள் குறித்து ஆய்வு செய்தனர். சி.எம்.ஓ., ஜெயந்தி, டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு போலீஸ் அவுட்போஸ்ட் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தினர்.

