நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் முனியாண்டி 56. இவர் அதே பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல் முழுவதும் அரிப்பு நோய் இருந்துள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இவர் குடும்பத்தினர் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

