ADDED : ஆக 28, 2024 03:54 AM
மதுரை தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக இந்தியா முழுவதும் பாஸ்போர்ட் சேவைகள் நாளை மறுநாள் (ஆக.30) நிறுத்தப்பட உள்ளது.
மதுரை மண்டல அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள், கோச்சடை, திருநெல்வேலி தபால் நிலைய மையங்கள், கொடைரோடு, போடிநாயக்கனுார், ராமநாதபுரம், தேவகோட்டை, விருதுநகர், ராஜபாளையம், துாத்துக்குடி, நாகர்கோவில் மையங்களில் பணிகள் நடைபெறாது. அன்றைய நாளில் ஏற்கனவே முன்அனுமதி பெற்றவர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப முன்அனுமதியை மறுதேதிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு பாரதி உலா வீதியில் இயங்கும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலும் விண்ணப்பதாரர்களுக்கான விசாரணைப் பிரிவு அன்று செயல்படாது. இதுகுறித்து 0452- 252 1204 ல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என பாஸ்போர்ட் மண்டல அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.