/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராணுவ வீரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்; ஒருவர் கைது
/
ராணுவ வீரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்; ஒருவர் கைது
ராணுவ வீரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்; ஒருவர் கைது
ராணுவ வீரர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்; ஒருவர் கைது
ADDED : ஆக 03, 2024 06:29 AM

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராணுவ வீரர் மீது வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நாடகம் ஆடிய மனைவி, மகன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் மனைவி, மகன் உள்ளிட்ட ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒருவர் கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்த ராணுவ வீரர் தர்மலிங்கம் 42, மனைவி ஜோதி 36, மகன் சஞ்சய் 18, ஏப்.,3ல் விடுமுறைக்கு வந்த தர்மலிங்கமும் அவரது மகனும் விமான நிலைய ரோட்டில் டூ வீலரில் சென்றனர்.
விடத்தக்குளம் அருகே சென்றபோது இயற்கை உபாதைக்காக வாகனத்தை நிறுத்தும்படி மகன் கூறியதால் தர்மலிங்கம் வாகனத்தை நிறுத்தினார். அந்த வழியாக வந்த வேன் தர்மலிங்கத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டதால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தர்மலிங்கத்தின் மனைவி ஜோதியும், உலகாணி பால்பாண்டி என்பவரும் திருமணத்திற்கு முன்பு காதலித்து உள்ளனர். ஆனால் ஜோதியின் பெற்றோர் தர்மலிங்கத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பின்பும் ஜோதி பால்பாண்டியுடன் தொடர்பை நீடித்துள்ளார்.
இதைத் தெரிந்த தர்மலிங்கம் கண்டிக்கவே அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். இதில் மகன் சஞ்சையும் உதவி செய்துள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கத்தை பால்பாண்டியின் தம்பி உக்கிரபாண்டி ஏற்பாட்டில் சிந்தாமணியை சேர்ந்த மினி வேன் டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார் வேன் மூலமாக விபத்தை ஏற்படுத்தி தர்மலிங்கத்தை கொலை செய்துள்ளனர்.
விசாரணையில் இதை கண்டுபிடித்த போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜோதி, மகன் சஞ்சய், டிரைவர் பாண்டி, கிளீனர் அருண்குமார், உக்கிரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் பால்பாண்டி 42, நேற்று திருமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகராஜ் முன்னிலையில் சரணடைந்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்த பனையூரை சேர்ந்த ராமனை 55, போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.