/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒருபக்கம் கிடைக்குது: மறுபக்கம் தவிக்குது... புலம்பும் மக்கள்
/
ஒருபக்கம் கிடைக்குது: மறுபக்கம் தவிக்குது... புலம்பும் மக்கள்
ஒருபக்கம் கிடைக்குது: மறுபக்கம் தவிக்குது... புலம்பும் மக்கள்
ஒருபக்கம் கிடைக்குது: மறுபக்கம் தவிக்குது... புலம்பும் மக்கள்
ADDED : ஆக 20, 2024 01:09 AM

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஒருபுறம் குடிநீருக்காக மக்கள் தவிப்பதும், மறுபுறம் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாவதுமாகவும் உள்ளது.
குறிப்பாக கே.கே.நகர் சுப்பையா காலனி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரு மாதமாக மாநகராட்சி சார்பில் குடிநீர் சரிவர வினியோகப்பதில்லை. அப்படியே வந்தாலும் சொட்டு சொட்டாக விழுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. சிலர் லாரி தண்ணீர் பெறுகின்றனர். நாங்கள் ஆழ்துளை தண்ணீரையும், கேன் தண்ணீரையும் நம்பியே உள்ளோம் என்றனர்.
இது ஒருபுறமிருக்க, பைபாஸ் ரோடு சர்வீஸ் ரோட்டில் ஜவஹர் மெயின் ரோடு பிரிவு பகுதியில் பல நாட்களாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி ரோட்டில் ஓடுகிறது. இதனால் இப்பகுதி மக்களும் தண்ணீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
குடிநீருக்காக நகரின் பல இடங்களில் ரோடுகள், தெருக்கள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில் தவித்த வாய்க்கு தண்ணீரும் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.