/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காந்தி ஜெயந்தி போட்டி பங்கேற்க வாய்ப்பு
/
காந்தி ஜெயந்தி போட்டி பங்கேற்க வாய்ப்பு
ADDED : செப் 18, 2024 03:59 AM
மதுரை : மதுரை காந்தி மியூசியம், அரசு மியூசியம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு செப். 24 ல் மியூசிய வளாகத்தில் கட்டுரை, ஓவியப் போட்டி நடக்கிறது.
'இன்றைய சூழ்நிலையில் காந்திய சிந்தனைகள் ஏற்புடைமை' அல்லது 'காந்தியத்தைப் பின்பற்றுவதில் கல்லுாரி மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி காலை 10:30 மணிக்கு நடத்தப்படும். 'காந்தி காண விரும்பிய இந்தியா' அல்லது 'உலக அமைதியும் காந்தியும்' என்ற தலைப்பில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் மதியம் 2:30 மணிக்கு ஓவியப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
வெற்றி பெறுவோருக்கு அக். 2 காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்படும். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் உண்டு. பதிவு கட்டணம் இல்லை. பங்கேற்பாளர்கள் 98657 91420 ல் தொடர்பு கொள்ளலாம் என அரசு மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன், காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளனர்.