/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் வைக்க உத்தரவு
/
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் வைக்க உத்தரவு
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் வைக்க உத்தரவு
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை காவலில் வைக்க உத்தரவு
ADDED : மே 23, 2024 05:45 AM

மதுரை : கஞ்சா பறிமுதல் வழக்கில் சவுக்கு சங்கரை ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து யுடியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மே 4ல் கைது செய்தனர். கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் வெவ்வேறு போலீசில் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் சவுக்கு சங்கர் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் மே 8ல் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க அந்நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸ் காவலில் 2 நாட்கள் விசாரிக்க அதே நீதிமன்றம் மே 20 ல் அனுமதித்தது. விசாரணை, மருத்துவப் பரிசோதனை முடிந்து மீண்டும் நேற்று அதே நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன் போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி: போலீசார் துன்புறுத்தினார்களா.
சவுக்கு சங்கர்: துன்புறுத்தவில்லை. எனது தரப்பு வழக்கறிஞர் சந்தித்தார். வாக்குமூலம் அளிக்கவில்லை.
அரசு தரப்பு: வாக்குமூலம் அளித்தார்; கையெழுத்திடவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
ஒழிக கோஷம்
விசாரணை முடிந்து சவுக்கு சங்கரை கோவைக்கு கொண்டு செல்வதற்காக போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அவரை நோக்கி வழக்கறிஞர் கலைச்செல்வன் 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதுாறாக கருத்து வெளியிட்ட சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஒழிக' என கோஷமிட்டார்.
சவுக்கு சங்கரின் ஜாமின் மனு இன்று (மே 23) அதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

