/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாடுகளை திரும்ப ஒப்படைக்க கலெக்டரிடம் உரிமையாளர் மனு
/
மாடுகளை திரும்ப ஒப்படைக்க கலெக்டரிடம் உரிமையாளர் மனு
மாடுகளை திரும்ப ஒப்படைக்க கலெக்டரிடம் உரிமையாளர் மனு
மாடுகளை திரும்ப ஒப்படைக்க கலெக்டரிடம் உரிமையாளர் மனு
ADDED : ஜூலை 02, 2024 06:09 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., சக்திவேல், சமூகநலத் திட்ட அலுவலர் சங்கீதா, நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இலவச வீட்டு மனைகள் வேண்டி 171 மனுக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி 28 மனுக்கள், இதர சான்று தொடர்பாக 83 மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பாக 10 மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விபத்து நிவாரண தொகை உட்பட பல்வேறு பிரிவுகளில் 96 மனுக்கள் என மொத்தம் 814 மனுக்கள் வந்தன.
உச்சபரம்பு மேடு, புதுார், அய்யர்பங்களா, கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த சிலர் மாடுகளை தெருவில் விட்டுள்ளனர். அவற்றை மாநகராட்சியினர் பிடித்து கோசாலையில் விட்டுள்ளனர்.
அவற்றை திரும்ப உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
கலெக்டர் கூறுகையில், மாடுகளை தெருவில் விடுவதால் விபத்து நடக்கிறது. எனவே அவற்றை பறிமுதல் செய்து கோசாலையில் விடுவோம். எனவே அதனை தவிர்க்க வேண்டும்'' என்றார்.