/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
/
சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் தயார்
ADDED : ஜூலை 30, 2024 05:47 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் செப்டம்பரில் சம்பா சாகுபடிக்கான நெல் விதைகள் வேளாண் துறையின் கீழ் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளது.
தற்போது கோ 51 நெல் ரகத்தில் 90 டன், என்.எல்.ஆர்.34449 ரகத்தில் 22 டன், ஆர்.என்.ஆர்.15048 ரகத்தில் 25 டன், கோ 51 ல் 15 டன், ஜெ.ஜி.எல். 1798 ல் 17 டன் விதைகள் இருப்பில் உள்ளன. விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 50 சதவீத மானியம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கான விதை மானியம் வழங்கப்படுகிறது.
கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக்கடைகளில் 5670 டன் யூரியா, 1055 டன் டி.ஏ.பி., 790 டன் பொட்டாஷ், 3309 டன் காம்ப்ளக்ஸ், 523 டன் எஸ்.எஸ்.பி. உரங்கள் இருப்பில் உள்ளது. நெல் விதைகளும் உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ள நிலையில் சம்பாவுக்கான தண்ணீர் திறப்பை விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.