நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை மற்றும் ஸ்வஸ்தா நீர் மேலாண்மை சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 'நம் சமுதாயத்திற்கு தண்ணீரின் மதிப்பு' என்னும் தலைப்பில் மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடந்தது.
பேராசிரியை அகிலாண்டேஸ்வரி நடுவராக இருந்து பரிசு வழங்கினார். ராதிகா முதல் பரிசு, ஸ்ரீலேகா 2ம் பரிசு, சுமையா பானு 3ம் பரிசை பெற்றனர். முதல்வர் கவிதா, கல்லுாரி தலைவர் மோகன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாலகுரு, ஆலோசகர் மாரிஸ் குமார், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் பங்கேற்றனர்.

