ADDED : ஆக 13, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓடைப்பட்டி ஊராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
அவர் பேசியதாவது: அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும். ஆனால் பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.,வினரின் அசைன்மென்ட் என்றார். பா.ஜ.,வினரின் அசைன்மென்ட் என்ன ஆகும் என்பது ஆண்டவனுக்குதான் தெரியும்.
ஜெயலலிதாவை பற்றி நாலாந்தரமாக பேசிய அமைச்சர் அன்பரசனை முதல்வர் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

