நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலக பகுதிகளில் நடவு செய்ய பனை விதைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் பனை மேம்பாட்டு இயக்கம் சார்பில் பனை விதைகள் நடவு செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தனி நபர் ஒருவருக்கு 50 விதைகள், ஊராட்சி சார்பில் பொது இடங்களில் நடவு செய்ய 100 பனை விதைகள் இலவசமாக வழங்கப்படும்.
தனிநபர்கள் சிட்டா, ஆதார் நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் திருநகர் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெறலாம். விவரங்களுக்கு உதவி அலுவலர்கள் பேபி ஷாலினி 63691 48798, ஜெயபால் 86678 79177 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோகிலா சக்தி தெரிவித்தார்.