ADDED : ஜூலை 08, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றனர். விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் தொண்டர்கள் வரவேற்றனர்.
புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் தயாரித்திருந்த தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்த துண்டு பிரசுரத்தை பழனிசாமி வெளியிட்டார்.