/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரவை ரயில்வே கேட் நிழல் பந்தல் அமைப்பு
/
பரவை ரயில்வே கேட் நிழல் பந்தல் அமைப்பு
ADDED : மே 09, 2024 05:46 AM

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி சார்பில் ரயில்வே கேட் பகுதியில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.
கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட பரவை பேரூராட்சி அலுவலகம், ரயில்வே கேட், சத்தியமூர்த்தி நகர், ஊர்மெச்சிகுளம் பகுதியில் பேரூராட்சி சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட்டின் ஒருபுறம் வெயிலில் காத்திருக்கும் வாகனஓட்டிகள் சிரமத்தை குறைக்க நிழல் பந்தல் அமைத்துள்ளதாக செயல் அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார்.
வாடிப்பட்டியில் பேரூர் தே.மு.தி.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.பேரூர் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். பொருளாளர் சோமநாதன், துணை செயலாளர் தமிழன் முருகன், முன்னாள் பேரூர் செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.