ADDED : செப் 03, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மத்திய அரசு நிதியில் தமிழகம் முழுவதும் நடக்கும் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பார்லிமென்ட் நிலைக்குழு சார்பில் மதுரையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
நிலைக்குழுத் தலைவர் தம்பித்துரை எம்.பி., தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், சிட்கோ நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்துாரி, கலெக்டர் சங்கீதா, மத்திய சுற்றுலாத்துறை மண்டல இயக்குநர் வெங்கடேசன், விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மாமல்லபுரத்தில் மத்திய அரசு நிதியில் நடக்கும் சுற்றுலா திட்டங்களின் வளர்ச்சி, மதுரை, துாத்துக்குடி விமான நிலைய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.