ADDED : ஆக 23, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் மையத்தில்19வது பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பார்த்தீனியம் விஷச் செடிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த பயிற்சியை இணைப் பேராசிரியர் சுரேஷ் வழங்கினார். அவர் பேசுகையில், ''இச்செடி மனிதருக்கும் விலங்குகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மருத்துவ ரீதியாக விஷச் செடி என்கின்றனர். இச்செடி பூக்கும் முன்பாக கையால் பிடுங்கியும், இயந்திரம் மூலம் உழுதும் அழிக்கலாம். வீட்டு உப்பை கரைத்து தெளித்தும், மெக்சிகன் வண்டுகள் மூலமும் கட்டுப்படுத்தலாம். 'கிளைப்போசேட்' என்ற களைக் கொல்லியை பயிர் சாகுபடி இல்லா நேரங்களில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்'' என்றார்.

