/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்களை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வலியுறுத்தல் பயணியர் சங்கம் வலியுறுத்தல்

ADDED : மார் 07, 2025 04:33 AM
மதுரை: செங்கோட்டை - மயிலாடுதுறை தினசரி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2022 அக்டோபர் முதல் மதுரை - செங்கோட்டை - மதுரை ரயில்களை (56735/56732), மயிலாடு துறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை ரயில்களுடன் (16847/16848) இணைத்து மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்களாக இயக்கப்படுகின்றன. தினமும் காலை 6:55 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு காலை 10:10க்கு மதுரை வழியாக மாலை 4:05க்கு மயிலாடுதுறை செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 12:10க்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மாலை 5:10க்கு மதுரை வழியாக இரவு 8:55க்கு செங்கோட்டை செல்கிறது.
இந்த இரு ரயில்களும் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் வழியாக இயக்கப்படுகின்றன. முக்கிய ஆன்மிக தலங்கள் வழியாகச் செல்வதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என நாளுக்கு நாள் பயணியர் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதிய இடம் கிடைக்காமல் கழிப்பறை அருகே அமர்ந்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் சிரமப்படுகின்றனர்.
தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொது செயலாளர் பத்மநாதன் கூறுகையில், ''அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இந்த ரயில்களில் கூடுதலாக 7 பொதுப்பெட்டிகளும், ஒரு முன்பதிவு ஏ.சி., சேர்கார் பெட்டியும் சேர்த்து 20 பெட்டிகளுடன் இயக்க வேண்டும்,'' என்றார்.