/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த பயணிகளை கட்டாயப்படுத்தக்கூடாது டி.ஆர்.இ.யூ., வலியுறுத்தல்

ADDED : மே 02, 2024 05:37 AM
மதுரை: முன்பதிவு செய்யும் பயணிகளை டிஜிட்டல் முறையில் தான் பணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் (டி.ஆர்.இ.யூ.,) வலியுறுத்தியுள்ளது.
மதுரை கோட்ட இணைச் செயலாளர் சங்கரநாராயணன் கூறியதாவது: ரயில் பயணிகள் பயண கட்டணத்தை ரயில்வே முன்பதிவு மையங்களில் டிஜிட்டல் முறையில் தான் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. முன்பதிவுக்கு வருவோர் ஏ.டி.எம்., கார்டு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. போன் பே, ஜி பே மூலம் பணம் செலுத்தும் போது சேவை கட்டணமாக ரூ.5க்கு மேல் பிடிக்கப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி பெறும் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பணம் உடனடியாக கிடைப்பது இல்லை. எப்போது கிடைக்கும் என உறுதி சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. முன்பதிவு செய்வோர் அனைவரும் டிஜிட்டல் வசதியுடன் அலைபேசி வைத்திருப்பார்கள் என்று கூறமுடியாது. எனவே ரயில் பயணிகளை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்றார்.