/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜவ்வாக இழுக்கும் 'பேவர் பிளாக்' பணிகள்; பெருமாள் தெப்பக்குளம் வியாபாரிகள் விரக்தி
/
ஜவ்வாக இழுக்கும் 'பேவர் பிளாக்' பணிகள்; பெருமாள் தெப்பக்குளம் வியாபாரிகள் விரக்தி
ஜவ்வாக இழுக்கும் 'பேவர் பிளாக்' பணிகள்; பெருமாள் தெப்பக்குளம் வியாபாரிகள் விரக்தி
ஜவ்வாக இழுக்கும் 'பேவர் பிளாக்' பணிகள்; பெருமாள் தெப்பக்குளம் வியாபாரிகள் விரக்தி
ADDED : ஜூன் 15, 2024 06:23 AM

மதுரை : மதுரை மாநகராட்சி 76 வது வார்டு டவுன் ஹால் ரோடு பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் பச்சை நாச்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் ஜவ்வாக இழுத்தடிக்கப்பட்டு, போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகள் ஏற்படுவதால் வியாபாரிகள் விரக்தியில் உள்ளனர்.
பெருமாள் தெப்பக்குளம் பகுதியில் தங்கும் விடுதிகள் அதிகம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். வர்த்தக கடைகள் நெருக்கடியாக அமைந்துள்ள பகுதி. இந்த பிரதான ரோட்டில் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் 20 நாட்களுக்கு முன் துவங்கியது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் நடந்துசெல்வது சவாலாக மாறியது. ரோட்டின் முக்கியத்துவம் கருதி 'பேவர் பிளாக்' பதிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் துரிதப்படுத்தவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது: வர்த்தக நிறுவனங்கள் நெருக்கமாக உள்ள இப்பகுதியில் இருந்து மாநகராட்சிக்கு அதிக வரி கிடைக்கிறது. ஆனால் அதற்குரிய அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை. குறிப்பாக குப்பையை அள்ளுவதில்லை. பகலிலும் பிரதான ரோட்டின் இருபுறத்தையும் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். சீராக இல்லாமல், ஏற்ற இறக்கமாக பேவர் பிளாக் கற்களை பதித்ததுடன், பணிகளையும் கிடப்பில் போட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.
மாநகராட்சி கண்டுகொள்வதில்லை. சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்றனர்.
கவுன்சிலர் (தி.மு.க.,) கார்த்திக் கூறுகையில், பகலில் பணி செய்தால் அப்பகுதியில் பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. இரவில் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ரோடுகளில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பணிகளை முடிக்க சவாலாக உள்ளது. விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை உரிய முறையில் அகற்றப்படுகிறது என்றார்.