/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரு கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை
/
இரு கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை
ADDED : ஆக 20, 2024 01:08 AM
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா வாகைகுளம் சென்றாய பெருமாள் மற்றும் விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் ஆக.,22ல் நடக்கிறது.
பெரிய வாகைகுளம் மற்றும் சின்ன வாகைகுளம் மக்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் தொடர்பாக இருதரப்பிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் அமைதி கூட்டம் நடந்தது.
சிந்துபட்டி எஸ்.ஐ., அருள்ராஜ், பன்னிக்குண்டு வருவாய் ஆய்வாளர் கவுசல்யா, வி.ஏ.ஓ., அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோயில் கணக்கு வழக்குகள் தொடர்பான விவரங்களை இரு கிராம மக்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திருவிழாவின் போது பெரிய வாகை குளத்தில் செய்யப்பட்டுள்ள விழா ஏற்பாடுகளை போன்று சின்ன வாகைகுளத்திலும் செய்ய வேண்டும். கிராம கமிட்டி அமைத்து செயல்படுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

