ADDED : ஜூன் 16, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: ரயில்வே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பயண பாஸ் இனிமேல் இ பாஸாக வழங்கப்படும் என்ற உத்தரவை ரத்துசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்னிந்திய ரயில்வே ஓய்வூதியர் சங்க மதுரைக்கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்க செயல் தலைவர் நவுஷாத் அலி தலைமை வகித்தார்.
தலைவர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு மாஸ்க் அணிந்தும், பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இ பாஸ் குறித்த உத்தரவை ரயில்வே வாரியம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. செயலாளர் தியாகராஜன், பொருளாளர் பீட்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்,
