ADDED : ஜூன் 16, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: புதுார் தலைமைப் பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன்பு, நேற்று கேங்மேன்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டச் செயலாளர் ராசாங்கம் தலைமை வகித்தார். முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், போராடும் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். திட்டச் செயல் தலைவர் ஆண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
