ADDED : ஜூன் 16, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அரசு தரப்பில் மரியாதை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கலெக்டர் காலை 11:30 மணி வரை விஸ்வநாததாஸ் நினைவிடத்திற்கு வரவில்லை. இதனால் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்திருந்த சமுதாயம பிரமுகர்கள், கட்சியினர் பொதுமக்கள் காத்திருந்தனர். நேரம் ஆகஆக உசிலம்பட்டி ரோடு, மதுரை விருதுநகர் ரோடு பகுதிகளில் சிலர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணி நேரம் நடந்த மறியலால் நகருக்குள் கடும் நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன.
