/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛கழிவு கலந்த நீரே எங்களுக்கு குடிநீர்: அனுப்பானடி மக்கள் கண்ணீர்
/
‛கழிவு கலந்த நீரே எங்களுக்கு குடிநீர்: அனுப்பானடி மக்கள் கண்ணீர்
‛கழிவு கலந்த நீரே எங்களுக்கு குடிநீர்: அனுப்பானடி மக்கள் கண்ணீர்
‛கழிவு கலந்த நீரே எங்களுக்கு குடிநீர்: அனுப்பானடி மக்கள் கண்ணீர்
ADDED : மே 01, 2024 07:37 AM

மதுரை : மதுரை அனுப்பானடி பகுதி காமாட்சி அம்மன் குறுக்குத் தெருவில் சாக்கடை மூடி உடைந்து, வெளியேறும் கழிவுநீர் குடிநீரில் கலப்பதால் மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
மதுரை மாநகராட்சி 88 வது வார்டில் காமாட்சி அம்மன் தெரு, சரவணா நகர், கங்கா நகர், மாருதி நகர் பகுதிகள் உள்ளன. இங்கு எட்டாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. காமாட்சி குறுக்குத் தெரு ரோட்டில் கழிவுநீர் தேங்கி, குடிநீருடன் கலப்பதால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். ரோடுகள் சரியாக இல்லாததால் கழிவுநீர் ரோட்டிலயே தேங்கி நிற்கிறது.
கடன் வாங்கி வரி கட்டுறோம்
தனலட்சுமி: சரியான ரோடு வசதி இல்லாததால் வாகனங்களில் செல்கையில் உடல் வலி ஏற்படுகிறது. பாதை குண்டும் குழியுமாக இருப்பதால் இப்பகுதியில் செல்பவர்கள் தடுக்கி விழுகின்றனர். சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறி, வீட்டு வாசல்களிலும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தீர்ந்த பாடில்லை.
குடிதண்ணீர் வண்டி வருவதில்லை. தினமும் ரூ. 65க்கு குடிதண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கடன் வாங்கி வரி கட்டுவதோடு, பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிஉள்ளது.
அடிப்படை வசதி தேவை
சண்முகவேல்: கங்கா நகரில் டேங்க் உடைந்து பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். பொது கழிப்பறை பல நாட்களாக சேதமடைந்து யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறது. மழைநீருக்காக அமைத்த வாய்க்காலில் சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்படைகிறோம்.
நிதியுதவி இன்றி சிரமம்
கவுன்சிலர் பிரேமா: மத்திய அரசு வழங்கும் குடிநீர் திட்டப்பணிகளை செய்து வருகிறோம். 2011ல் இப்பகுதி மாநகராட்சிக்குள் வந்தது. பஞ்சாயத்து நிர்வாகத்தில் இருந்தபோது பாதாள சாக்கடை வசதி இல்லை. 26 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் நிலுவையில் உள்ளது. இப்பகுதிக்கு இன்னும் நிதி வழங்கப்படவில்லை. விரிவாக்கப் பகுதிகளுக்கு ரூ.526 கோடி பாதாள சாக்கடை அமைக்க ஒதுக்கியுள்ளனர். எங்கள் வார்டுக்கு ரூ.86 கோடி கேட்டுள்ளோம். இரு ஆண்டுகளாக மின் மோட்டாரை மாற்றித் தரும் படி கேட்டும் தரவில்லை. அதை மாற்றித் தந்தால் குடிநீருடன் சாக்கடை நீர் கலக்காமல் தடுக்கலாம். தேவையான நிதிதந்து, வேறு இடத்தில் பம்பிங் ஸ்டேஷன் கட்டினால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை தடுக்கலாம் என்றார்.