ADDED : நவ 16, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் நேற்று 39 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 99 பேர் வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களில் 31 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். புறநகரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.