/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பரமநாதபுரத்தில் தண்ணீர் கிடைக்காத மக்கள் கண்ணீர்
/
பரமநாதபுரத்தில் தண்ணீர் கிடைக்காத மக்கள் கண்ணீர்
ADDED : ஏப் 05, 2024 05:55 AM

மேலுார் : பரமநாதபுரத்தில் போர்வெல்லில் தண்ணீர் இருந்தும் மோட்டார் பழுதால் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது
கச்சிராயன்பட்டி ஊராட்சி பரமநாதபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப் பகுதியில் 2014 ல் போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியில் நீரேற்றி சப்ளை செய்தனர். இந்நிலையில் மோட்டார் பழுது ஏற்பட்டதால், பழுது நீக்க மோட்டாரை கழற்றி சென்றனர். அதன்பின் இன்றுவரை சரி செய்யப்படவில்லை.
சண்முகம் என்பவர் கூறியதாவது:
குடிநீர் வினியோகம் இல்லாததால் பல கி.மீ., துாரம் தண்ணீரை தேடி அலைகிறோம். தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் பழுதான மோட்டாரை சரி செய்யவில்லை. போர்வெல்லில் தண்ணீர் இருப்பதால் அதிகாரிகள் உடனே மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்றார்

