/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள்
/
பள்ளி கழிப்பறைகளை பயன்படுத்தும் மக்கள்
ADDED : மார் 29, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா எஸ்.பாரைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 90க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். 5 ஆசிரியர்கள் உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் இடிந்தது. புதிய சுவர் கட்ட டெண்டர் விட்டு 6 மாதமாகியும் பணி துவங்கவில்லை.
சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். பள்ளி வளாகம் இரவு நேர மது 'பாராக' உள்ளது. பெற்றோர்கள் பலமுறை டி.கல்லுப்பட்டி யூனியன் அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

