sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெராக்கா நகர், செங்குன்றத்தில் அடிப்படை வசதி குறைவால் அவதி

/

பெராக்கா நகர், செங்குன்றத்தில் அடிப்படை வசதி குறைவால் அவதி

பெராக்கா நகர், செங்குன்றத்தில் அடிப்படை வசதி குறைவால் அவதி

பெராக்கா நகர், செங்குன்றத்தில் அடிப்படை வசதி குறைவால் அவதி


ADDED : மார் 28, 2024 06:38 AM

Google News

ADDED : மார் 28, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பசுமலை பெராக்கா நகர், செங்குன்றம் பகுதிகளில் அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.

மதுரை பசுமலை பெரக்கா நகரில்காலி மனைகளில் குப்பை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நகரில் ரோடு வசதி, தெரு விளக்கு இல்லாததால் மக்கள் இரவு நேரங்களில் தவிப்பிற்குள்ளாகின்றனர்.

குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாததால் கர்ப்பிணிகள், முதியோர் சிரமப்படுகின்றனர். செங்குன்றம் நகர் பகுதியிலும் இதேநிலை உள்ளது. இங்கிருந்து அவனியாபுரம் செல்லும் ரோடு 500 மீ., தொலைவுக்கு தார் பெயர்ந்து மோசமாக உள்ளது.

மன உளைச்சலை தருகின்றனர்


தனலட்சுமி கூறியதாவது: செங்குன்றத்தில் இரு ஆண்டுகளாக அடிப்படை வசதி செய்து தரவில்லை. பல முறை தெரிவித்த பின்பும் சில பகுதிகளில் மின்விளக்கு இல்லை. வீட்டுவரி வசூலிக்கும்போது மட்டும் அலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு மனஉளைச்சலை ஏற்படுத்தினர். வரி செலுத்திய பின் அவர்களை தொடர்பு கொண்டால் அலைபேசியை எடுப்பதில்லை. இதுபற்றி யாரிடம் முறையிடுவது எனத் தெரியவில்லை.

பாம்புகள் தொல்லை


கங்காராஜு கூறியதாவது: அடிப்படையான ரோடு, பாதாள சாக்கடை, குடிநீர், மின்விளக்கு எதுவும் இல்லாமல் பெரும் தொகையை வீட்டுவரியாக நிர்ணயித்தனர். எந்த வசதியும் இல்லாத பகுதிக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என்று கேட்டால், மின்சாரத்தை துண்டிப்போம் என்றனர். வரிசெலுத்தாதவர் வீடுகளில் கருப்பு மையால் எழுதிச் செல்கின்றனர். இரவு நேரம் பாம்புகள் தொல்லை உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us