/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடையுடன் செல்ல அனுமதி வேண்டும்: மீனாட்சி பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
குடையுடன் செல்ல அனுமதி வேண்டும்: மீனாட்சி பக்தர்கள் எதிர்பார்ப்பு
குடையுடன் செல்ல அனுமதி வேண்டும்: மீனாட்சி பக்தர்கள் எதிர்பார்ப்பு
குடையுடன் செல்ல அனுமதி வேண்டும்: மீனாட்சி பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 13, 2024 05:59 AM
மதுரை : 'மழை நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயில் ஆடி வீதி வழியாக செல்ல பக்தர்கள் குடையுடன் செல்ல நிர்வாகமும், போலீசாரும் அனுமதிக்க வேண்டும்' என எதிர்பார்க்கின்றனர்.
கோயிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவையொட்டி தினமும் பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். 4 கோபுரங்கள் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.
குறிப்பாக மேல கோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல மேற்கு, தெற்கு ஆடி வீதியில் திறந்த வெளியில் மழையில் நனைந்தவாறு செல்கின்றனர். இதனால் வயதானோர், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே பக்தர்கள் குடையுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பக்தர் ஞானஸ்கந்தன் கூறியதாவது: ஆடி முளைக்கொட்டு திருவிழாவுக்கு சென்றோம்.
அம்மன் பவனி வந்த போது 2 மணி நேரம் மழை பெய்ததது. குடை இல்லாததால் தரிசனம் செய்ய முடியாமல் பலர் வீடு திரும்பினர். குழந்தைகளும் மழையில் நனைந்தனர். மற்றொரு நாள் சந்நிதியை சுற்றி வரும் மழையால் சுவாமி உலா வரமுடியவில்லை என்றார்.