/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கள்ளழகருக்கு வழி ஏற்படுத்த திருக்கண் மண்டபத்தினர் மனு
/
கள்ளழகருக்கு வழி ஏற்படுத்த திருக்கண் மண்டபத்தினர் மனு
கள்ளழகருக்கு வழி ஏற்படுத்த திருக்கண் மண்டபத்தினர் மனு
கள்ளழகருக்கு வழி ஏற்படுத்த திருக்கண் மண்டபத்தினர் மனு
ADDED : ஏப் 15, 2024 01:41 AM
மதுரை : 'சித்திரைத் திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கிருஷ்ண விலாச பலிஜா சபா திருக்கண் மண்டபத்தில் இறங்க வழி ஏற்படுத்தி தரவேண்டும்' என சபாவின் தலைவர் ராதாகிருஷ்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
மதுரை தெற்கு வாசல் நாயுடு மகாஜன மக்களின் ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜா சபா திருக்கண் மண்டகப்படி, வைகை வடகரை ஆழ்வார்புரத்தில் உள்ளது.பாரம்பரியம் மிக்க இம்மண்டகப் படியில் ஆண்டுதோறும் கள்ளழகர் எழுந்தருள்வது வழக்கம்.
ஆற்றில் இறங்கியபின் இம்மண்டபத்தில் எழுந்தருளி வைபவங்கள் முடிந்தபின் மற்ற மண்டபங்களில் எழுந்தருள்வார்.
இம்மண்டகப்படி ஆற்றில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் முதல் மண்டபமாக உள்ளது. இங்கு கடந்தாண்டு கள்ளழகர் எழுந்தருள வழி ஏற்படுத்தி தராததால், இச்சமுதாய மக்கள், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். எனவே இந்தாண்டு சுவாமி ஆற்றில்இருந்து புறப்படும்போதுஎங்கள் மண்டபத்தில் எழுந்தருள வழி ஏற்படுத்தி தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

