/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுச்சாவடி பார்வையாளராக்க கலெக்டரிடம் மனு
/
ஓட்டுச்சாவடி பார்வையாளராக்க கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 22, 2024 03:03 AM
மதுரை: ''பத்துக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளைக் கொண்ட வி.ஏ.ஓ.,க்களை ஓட்டுச்சாவடி மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும்'' என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் சுரேஷ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலெக்டர் சங்கீதாவிடம் அளித்த மனு: பணியிட கோட்ட மாறுதல் கோரும் வி.ஏ.ஓ.,க்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பிப்போர் மனுக்களை வருவாய் நிர்வாக ஆணையரிடம் விரைந்து அனுப்ப வேண்டும்.
வி.ஏ.ஓ.,க்களின் பணிப்பதிவேட்டில் வருடாந்திர ஊக்க ஊதியம், மகப்பேறு விடுப்பு, பணியிட மாறுதல் போன்ற பதிவுகளை தாலுகா அலுவலகங்களில் உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். கிராம உதவியாளர்கள் இல்லாத நிலையில், தேவையான கிராமங்களுக்கு உதவியாளர்களை பதவி நியமனம் செய்ய வேண்டும்.
பல மாவட்டங்களில் வி.ஏ.ஓ.,க்கள் தேர்தல் மேற்பார்வையாளராக பணியாற்றுகின்றனர். மதுரை மாவட்டத்திலும் 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் கொண்ட வி.ஏ.ஓ.,க்களை தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.