/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாய்க்காலை மறைத்து கட்டும் வீட்டுக்கு 'பிளான் அப்ரூவலா'; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் 'சரமாரி'

ADDED : மார் 12, 2025 01:21 AM
திருமங்கலம்; திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்ட வழங்க அலுவலர் அய்யம்மாள் தலைமையில் நடந்தது. வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
மேல உரப்பனுார் விவசாயி பழனி பேசுகையில், 'இங்குள்ள இ சேவை மையம் பூட்டிக்கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது' என்றார்.
வைகைப் பெரியார் பாசன திட்ட விவசாயி ஜெயக்குமார் பேசும்போது, 'கீழ உரப்பனுார் உலர் களங்களில் மாடுகளை கட்டி வைப்பதால் களங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது' என்றார்.
வட்ட வழங்க அலுவலர் அய்யம்மாள் பேசுகையில், 'உலர் களங்களில் கால்நடைகளை கட்டுவோருக்கு அபராதம் விக்கப்படும் இதை உடனே வருவாய் ஆய்வாளர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என்றார். மறவன்குளம் விவசாயி வெள்ளையத்தா பேசுகையில், 'வைகை அணையில் இருந்து திருமங்கலம் தாலுகா விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது இன்று வரை மறவன்குளம் கண்மாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. தண்ணீர் வரும் மடையில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும். மறவன்குளத்தில் வாய்க்கால் மோசமாக உள்ளது. வாய்க்காலை மறைத்து வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் வழங்குகின்றனர். இதுபோன்ற காரணங்களால் கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை என்றார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.