ADDED : ஜூன் 16, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகர் பகுதியில் நகராட்சி தலைவர் முகமது யாசின், கமிஷனர் சண்முகம், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் 500 மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2026 செயல்படுத்துதல் சம்பந்தமான சிறப்பு கூட்டம், பிறகு சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மற்றும் ரோட்டின் இருபுறத்திலும் குவிந்து கிடந்த மண் அகற்றப்பட்டது. சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
