
இளைஞர் கொலை
மதுரை:சிலைமான் சுப்பிரமணி மகன் அழகர்சாமி 19. கூலி வேலைக்கு சென்று வந்தவர், மது பழக்கத்திற்குள்ளானவர். நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டிற்கு வந்த சிலர், கதவை தட்டி அழகர்சாமியை வெளியே வருமாறு கூறினர். வெளியே வந்தவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்து தப்பினர். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நேற்றுமுன்தினம் சிக்கந்தர் சாவடியில் கொலை நடந்த 12 மணி நேரத்திற்குள் மற்றொரு கொலை நடந்துள்ளது புறநகர் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இருவர் கைது
கொட்டாம்பட்டி:கோட்டைப்பட்டி அருண்பாண்டியன் 30. அப்பகுதி பெட்ரோல் பங்க் ஊழியர். நேற்று முன்தினம் காலை ஒரே டூ வீலரில் வந்த மூவர் பட்டா கத்தியை காட்டி பணப்பையை பறித்து தப்பினர். ஊழியர்கள் விரட்டவே பணப்பையை விட்டு சென்றனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் சங்கேஸ்வரன் 21, இளமாறனை 23, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் விஜய் கைது செய்தனர்.
நண்பன் கொலை: நண்பர்கள் கைது
அலங்காநல்லுார்:சிக்கந்தர்சாவடி எஸ்.வி.டி.,நகர் கமலேஷ் 24. நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இவரது நண்பர் தினமணி நகர் அழகு ராஜேஷ் 24. இவரது சகோதரர் சுந்தர்ராஜா மனைவி குறித்து கமலேஷ் தெரிவித்த கருத்தால் 6 மாதங்களுக்கு முன் விரோதம் ஏற்பட்டது. பின் மது அருந்திய போது சுந்தர்ராஜ் நண்பர் ராய் என்பவரை கமலேஷ் பாட்டிலால் தாக்கினார். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கமலேஷை நண்பர்கள் கொலை செய்தனர். இதுதொடர்பாக அழகுராஜேஷ், சுந்தர்ராஜா 22, அவர்களது நண்பர் சேதுவை 21, அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். ராயை தேடி வருகின்றனர்.