
வீட்டில் திருட்டு
அலங்காநல்லுார்: மேலபனங்காடி மலேசியா நகர் பாலசுப்பிரமணியன் 65.நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மூன்றரை பவுன் நகை திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
அண்ணியை -------------------------------கொன்றவர் கைது
திருமங்கலம்: சிந்துபட்டி அருகே வகுரணி முத்தையம்பட்டி பெருமாள். இவரது மனைவி பஞ்சமாள் 48. பெருமாளுக்கும் அவரது தம்பி பாண்டிக்கும் 48, இடப்பிரச்சனை இருந்தது. நேற்று காலை பெருமாள் வேலைக்கு சென்றபின் பஞ்சம்மாள் வீட்டில் இருந்தார். பாண்டி வீட்டின் முன்பு இருந்த கல்லை தனதுவீட்டின் முன்பு பஞ்சம்மாள் எடுத்து போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாண்டி கட்டையால் தாக்கியதில் பஞ்சம்மாள் இறந்தார். பாண்டியை சிந்துபட்டி போலீசார் கைது செய்தனர்.
உண்டியலில் திருட்டு
எழுமலை: பாப்பிநாயக்கன்பட்டி பாறை முனியாண்டி கோயில் லாக்கர், உண்டியலை உடைத்து பணம், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பூஜாரி பிரபு எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ஒருவர் துண்டால் முகத்தை மறைத்து திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.