/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு; 102 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
/
14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு; 102 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு; 102 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
14 ரவுடிகளின் சொத்துக்களை முடக்க போலீசாருக்கு உத்தரவு; 102 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : மார் 08, 2025 03:35 AM

மதுரை: மதுரையில் இருநாட்களாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். நேற்று போலீசாரின் குறைகளை கேட்டறிந்ததோடு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கினார்.
கமிஷனர் அலுவலகத்தில் முதல்நாள் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொடுங்காயம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ரவுடிகளுக்கு மீதான நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். ரவுடிகளின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டார். போக்சோ வழக்குகளில் விடுதலை அளிக்கப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்து தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தினார்.
போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: மதுரை நகரில் 28 ரவுடிகள், மாவட்டத்தில் 30 ரவுடிகளுக்கு இரு ஆண்டுகளில் தண்டனை வாங்கித்தரப்பட்டுள்ளது. நகரில் 8 ரவுடிகள், மாவட்டத்தில் 6 ரவுடிகள் தொடர்புடைய சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
89 ரவுடிகளுக்கு குண்டாஸ்
நகரில் 445 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணை பெறப்பட்டது. இதில் 25 பேர் நிபந்தனையை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 89 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 10 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை, 18 ரவுடிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 385 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டது. நிபந்தனைகளை மீறிய 11 ரவுடிகளுக்கு பிணை ரத்து செய்யப்பட்டது. 13 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 15 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு ரவுடி மீது கடுங்காவல் தண்டனையும் பெற்று தரப்பட்டது.
நல்வழித்திட்டம்
நகரில் 'பறவை' திட்டத்தின் கீழ் 18 - -24 வயதுடைய முதல் முறை தவறு செய்த 66 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் ஒருவர் தொழிற்பயிற்சி பள்ளியிலும், இருவர் தனியார் நிறுவனத்திலும் சேர்க்கப்பட்டனர். 31 பேருக்கு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 32 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றத்தரப்பட்டது.
பின்னர் மதுரை நகர், புறநகரைச் சேர்ந்த 163 போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குறைகளை டி.ஜி.பி., கேட்டறிந்தார். சிறப்பாக பணியாற்றியதற்காக 28 போலீசாருக்கு சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கமிஷனர் லோகநாதன், தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, எஸ்.பி. அரவிந்த் பங்கேற்றனர்.