ADDED : மார் 11, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகரில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் வாகன சோதனை செய்யப்பட்டது.
வாகனங்களில் அதிக ஒலிஎழுப்பும் ஹாரன்கள் பொருத்தியிருந்த 20 வாகனங்களை கண்டறிந்து அவற்றை கழற்றினர். ஹாரன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், சோபனா, எஸ்.ஐ.,க்கள் சுரேஷ், விஸ்வநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி பங்கேற்றனர்.
காளவாசல் பகுதியில் நடந்த வாகன சோதனையில் தங்கமணி, நந்தகுமார், பூர்ணகிருஷ்ணன், வாகன ஆய்வாளர் செல்வம் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.