ADDED : ஆக 15, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தாவரவியல் துறை மற்றும் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சார்பில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விதைப் பந்துகள் தயாரிக்கும் பயிற்சி துவங்கியது.
முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் வாசுதேவன் வரவேற்றார். பேராசிரியர் கதிரேசன் பேசினார். பேராசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார். வேம்பு, நாவல், புளி, அத்தி, வில்வம், செம்மரம், புன்னை, மூங்கில், தான்றிக்காய் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் கூறுகையில், ''தமிழகத்தின் பாரம்பரிய விதைகளை மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து 7 நாட்களாக சேகரித்தனர். அதில் விதைப் பந்துகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது என்றனர்.