ADDED : ஜூலை 10, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சேடபட்டி மள்ளப்புரத்தில் இயற்கை விவசாயம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
இயற்கை வேளாண் பயிற்றுநர் வேலுசாமி பேசுகையில், ''ஆடிப்பட்டத்தில் சோளம், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகள், குதிரைவாலி பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்யலாம். பஞ்சகவ்யம், மீன் கரைசல், இஞ்சி பூண்டு கரைசல், மோர் கரைசல், திரவ அசோஸ்பைரில்லம், ரைசோபியம் இயற்கை உரங்களை பயன்படுத்தி பூச்சி, நோய் தாக்குதலின்றி இயற்கை முறையில் அதிக மகசூல் பெறலாம்'' என்றார்.
வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி, துணை வேளாண் அலுவலர் பாண்டியன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா ஆகியோர் பல்வேறு தொழில்நுட்பங்களை விளக்கினர்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா, பிரித்விராஜன் செய்தனர். வேளாண் உதவி அலுவலர் முத்தையா நன்றி கூறினார்.